TNTET Model Question and Answers -01
கல்வி உளவியல் (1 - 30)
தனிச்செறிவுடைய தனிப்பட்ட பழக்கம் மற்றும் செல்வாக்கு என்பது.
A1: மனத்திறன், செயல்திறம், விருப்ப வேலை
A2: செயற்கைத் தனிப்பாங்கு பற்றிய பண்புரு
A3: ஒருவரது மனப்பான்மை
A4: பொதுவான தொழில்துறையில் நிகழ்கின்ற இசைவிப்பு
விடை: A2: செயற்கைத் தனிப்பாங்கு பற்றிய பண்புரு
உட்புற மற்றும் வெளிப்புற உடல் மாற்றங்கள் எற்படுவது ________ வளர்ச்சி என அழைக்கப்படுகிறது.
A1: அறிவு
A2: மனவெழுச்சி
A3: உடல்
A4: சமூக
விடை: A3: உடல்
ஊக்குவித்தலின் முக்கிய உத்தி என்று அழைக்கப்படுவது:
A1: கவனம் மற்றும் விருப்பம்
A2: விருப்பம் மற்றும் வழிகாட்டல்
A3: கற்றல் மற்றும் கவனம்
A4: ஊக்கம் மற்றும் கவனம்
விடை: A1: கவனம் மற்றும் விருப்பம்
”கல்வி உளவியல் என்பது கற்பித்தல்-கற்றலுக்கான தொடர்பை வழங்கும் ஒரு வகை உளவியல்” எனக் கூறியவர்:
A1: குரோவ் மற்றும் குரோவ்
A2: ஸ்கின்னர்
A3: பீல்
A4: மார்கியூஸ்
விடை: A2: ஸ்கின்னர்
ஒரு புலனறிவு வழு ஆனது எந்தவொரு உண்மையான தூண்டல் புலனுணர்வு அடிப்படையற்றது எனில் அது:
A1: திரிபுக்காட்சி
A2: புலன் உணர்வு
A3: இல் பொருள் காட்சி
A4: சாயலாதல்
விடை: A3: இல் பொருள் காட்சி
இரு காரணி கோட்பாட்டை முன்மொழிந்தவர்:
A1: E.L. தார்ண்டைக்
A2: கில்ஃபோர்ட்
A3: ஸ்பியர்மன்
A4: தஸ்டன்
விடை: A3: ஸ்பியர்மன்
"சாதிக்கும் சமுதாயம் (The achieving society)" என்ற நூலை எழுதியவர் யார்?
A1: டேவிட் ஆஸ்பல்
A2: ஆபிரஹாம் மாஸ்லோ
A3: டேவிட் மெக் கெல்லன்ட்
A4: பி.எஃப். ஸ்கின்னர்
விடை: A3: டேவிட் மெக் கெல்லன்ட்
உற்று நோக்கல் கற்றலில் உள்ள நான்கு படிநிலைகளை கண்டறிந்தவர்:
A1: மில்லர்
A2: டலார்ட்
A3: உட்ஒர்த்
A4: பன்டூரா
விடை: A4: பன்டூரா
பற்றாக் குறையான வேலைகள், வீட்டு வசதி அல்லது வளத்திற்காக குழுக்களுக்குள் ஏற்படும் ________ அடிக்கடி விரோதங்கள் எழுகின்றன.
A1: ஒத்துழைப்பால்
A2: போட்டியால்
A3: போராட்டத்தால்
A4: ஒப்பீட்டால்
விடை: A2: போட்டியால்
________ நிலை மேம்பாட்டில் தனிநபர் ஒரு வாக்கியத்தில் ஒரு சொல்லானது எவ்வகையாக செயல்படும் என்பதனை பகுத்தாயும் திறன்பெறுகிறார்.
A1: பின் குழந்தைப்பருவம்
A2: இளமைப்பருவம்
A3: குமரப்பருவம்
A4: முதிர்ந்த
விடை: A1: பின் குழந்தைப்பருவம்
நடத்தை வல்லுநர்கள் தவிர்த்த காரணி:
A1: சூழ்நிலை
A2: மரபு
A3: நடத்தை
A4: ஆளுமை
விடை: A2: மரபு
ஃப்ராய்டு என்பவரின் கூற்றுப்படி ஒரு குழந்தையின் ஒழுக்க மேம்பாடு இந்த வயதில் முடிவடைகிறது:
A1: 4
A2: 6
A3: 8
A4: 10
விடை: A2: 6
பயம், கோபம் மற்றும் பொறாமை போன்ற மனவெழுச்சிகள் ________ வகையைச் சார்ந்தது.
A1: நேர்மறை மனவெழுச்சி
A2: எதிர்மறை மனவெழுச்சி
A3: நடுநிலை மனவெழுச்சி
A4: பொய்யான மனவெழுச்சி
விடை: A2: எதிர்மறை மனவெழுச்சி
மோசமான பொழுதுபோக்கு ஊடகம் ________ நெறிபிறழ் நடத்தை குற்றத்திற்கு காரணம் ஆகும்.
A1: குடும்பம்
A2: தனிப்பட்ட
A3: சூழல்
A4: பள்ளி தொடர்பான
விடை: A3: சூழல்
தேர்வுக்கு உட்படுபவர் ________ மூலம் முயற்சி செய்து படப்புதிருக்கு தீர்வு காண்பர்.
A1: படங்களை நிறைவு செய்தல்
A2: பொருள்களை திரட்டுதல்
A3: படங்களை வரிசைப்படுத்துதல்
A4: எண் குறியீடு
விடை: A2: பொருள்களை திரட்டுதல்
மனித உடலானது ________ வகை திரவங்களைக் கொண்டது என ஹிப்போகிரேட்ஸ் வரையறுக்கிறார்.
A1: 4
A2: 5
A3: 9
A4: 11
விடை: A1: 4
பியாஜே எளிதான நிகழ்ச்சிகளை ________ எனவும் கடினமானவற்றைச் செயல்பாடுகள் என்றும் அழைக்கிறார்.
A1: பொருத்துதல்
A2: தன்வயப்படுத்துதல்
A3: ஸ்கீமா
A4: சமநிலைப்படுத்துதல்
விடை: A3: ஸ்கீமா
கோபத்தை ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் வெளிப்படுத்தும்போது ________ சுரப்பியின் சுரப்பு அதிகரிக்கும்.
A1: அட்ரீனல்
A2: தைராய்டு
A3: கோனாட்ஸ்
A4: பான்கிரியாஸ்
விடை: A1: அட்ரீனல்
________ என்பது கற்றலின் உச்சநிலை ஆகும்.
A1: ஆக்குதல்
A2: காரணப்படுத்துதல்
A3: மதிப்பிடுதல்
A4: தர்க்கம்
விடை: A1: ஆக்குதல்
தனிநபருடைய சூழலுக்கான உறவில் தனிநபருடைய செயல்களை அறிவியல்பூர்வமாக படிப்பதே உளவியல் ஆகும் எனக் கூறியவர்:
A1: என்.எல்.முன்
A2: க்ரோவ் மற்றும் க்ரோவ்
A3: உட்வெர்த் மற்றும் மார்க்யூஸ்
A4: பி.எஃப்.ஸ்கின்னர்
விடை: A3: உட்வெர்த் மற்றும் மார்க்யூஸ்
முன்கூட்டித் திட்டமிடல் இல்லாமலேயே எந்த வகைக் குழுவினர் ஒன்று சேர்வார்கள்?
A1: முறையான குழு
A2: தடையில்லா குழு
A3: முறைசார் குழு
A4: முறைசாரா குழு
விடை: A2: தடையில்லா குழு
வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருப்பது:
A1: மரபு மற்றும் முதிர்ச்சி
A2: முதிர்ச்சி
A3: முதிர்ச்சி மற்றும் கற்றல்
A4: கற்றல்
விடை: A3: முதிர்ச்சி மற்றும் கற்றல்
30 முதல் 50 வரையிலான மாணவர்களுடைய ஒரு வகுப்பை ஆசிரியர் சந்திக்கும் போது மிகப் பெரிய வேறுபாட்டு வீச்சில் இருப்பது?
A1: பாலினம்
A2: வயது
A3: உடல்
A4: தனியாள்
விடை: A4: தனியாள்
கீழ்கண்டவற்றில் எது தூண்டல் தேர்வை தீர்மானிக்கிறது?
A1: விருப்பம் மற்றும் மனப்பான்மை
A2: மனப்பான்மை மற்றும் ஈர்ப்பு
A3: விருப்பம் மற்றும் ஈர்ப்பு
A4: முக்கியத்துவம் மற்றும் ஈர்ப்பு
விடை: A1: விருப்பம் மற்றும் மனப்பான்மை
பயன்பாட்டு விதி மற்றும் பயன்படா விதியை ஒருங்கிணைக்க கிடைக்கும் விதி:
A1: பயிற்சி விதி
A2: ஆயத்த விதி
A3: மனப்பான்மை விதி
A4: விளைவு விதி
விடை: A1: பயிற்சி விதி
ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது இந்த தேர்வுக்கான உதாரணம்:
A1: அளவுகோல் சார்ந்த
A2: நெறிமுறை சார்ந்த
A3: தரம் சார்ந்த
A4: சமநிலை சார்ந்த
விடை: A1: அளவுகோல் சார்ந்த
வகுப்பறைகளில் உள்ள மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிக பொறாமையுடன் இருக்கின்றனர், ஏனெனில்:
A1: பாலினப் பாகுபாடு
A2: முன்னுரிமை அணுகுமுறை
A3: சாதகமற்ற ஒப்பீடுகள்
A4: சார்புத் தன்மை
விடை: A2: முன்னுரிமை அணுகுமுறை
ஒருவரின் சிக்கல் களைதல் நடத்தை எதை பொருத்தது?
A1: விழிப்புணர்வு
A2: மனப்பான்மை
A3: நாட்டம்
A4: மன நிலை
விடை: A4: மன நிலை
வகுப்பறையில் நெறிபிறழ்வை தடுக்க, ஆசிரியர்கள்:
A1: அந்த மாணவரிடம் அன்பாக இருத்தல்
A2: எல்லா மாணவர்களிடமும் நேர்மறை மனப்பான்மையை வளர்த்தல்
A3: அசாதாரண குழந்தைக்கு பரிசளித்தல்
A4: ஒவ்வொருவரிடமும் கடினமாக நடந்து கொள்ளுதல்
விடை: A2: எல்லா மாணவர்களிடமும் நேர்மறை மனப்பான்மையை வளர்த்தல்
'சிடுமுகம்' ஆளுமை உடையவர்கள்:
A1: மனவெழுச்சியில் பலவீனம் ஆனால் உடலளவில் பலம் உடையவர்கள்
A2: உடலளவில் பலம் மற்றும் மனவெழுச்சியிலும் நிலையானவர்கள்
A3: மனவெழுச்சி மற்றும் உடல் ரீதியாகவும் பலவீனமானவர்கள்
A4: மனவெழுச்சியில் பலமும் உடலளவில் பலவீனம் உள்ளவர்கள்.
விடை: A1: மனவெழுச்சியில் பலவீனம் ஆனால் உடலளவில் பலம் உடையவர்கள்
தமிழ் (31 - 60)
புறநானூறு உ.வே.சா வால் அச்சில் பதிப்பித்து வெளியிடப்பட்ட ஆண்டு:
A1: 1894
A2: 1794
A3: 1498
A4: 1948
விடை: A1: 1894
பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது:
A1: நிரல் நிறைப் பொருள்கோள்
A2: கொண்டு கூட்டுப் பொருள் கோள்
A3: ஆற்று நீர் பொருள் கோள்
A4: தாப்பிசை பொருள் கோள்
விடை: A3: ஆற்று நீர் பொருள் கோள்
"வள்ளி படித்தனள்"-இலக்கணக் குறிப்பு அறிக.
A1: வினையெச்சம்
A2: முற்றெச்சம்
A3: குறிப்புப் பெயரெச்சம்
A4: பெயரெச்சம்
விடை: A2: முற்றெச்சம்
பாரதமணி, பாரததேவி ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் யார்?
A1: வல்லிக்கண்ணன்
A2: கு.ப. ராஜகோபாலன்
A3: ஜெயகாந்தன்
A4: கல்கி
விடை: A2: கு.ப. ராஜகோபாலன்
வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற் நிண்மை யில்லையோர் செறுந ரின்மையால் - என்று சிறப்பிக்கப்படும் நாடு.
A1: ஏமாங்கத நாடு
A2: தென்பாண்டி நாடு
A3: கோசலை நாடு
A4: சோழ வள நாடு
விடை: A3: கோசலை நாடு
பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
A1: கூடை- வேய்ந்தான்
A2: பசு - கதறும்
A3: பால்- பருகினான்
A4: சேவல் கூவும்
விடை: A1: கூடை- வேய்ந்தான்
ஆத்திமாலை அணிந்த மன்னன் யார்?
A1: சேரன்
A2: சோழன்
A3: பாண்டியன்
A4: விஜயன்
விடை: A2: சோழன்
________ ல் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
A1: உயிர்மெய்
A2: அளபெடை
A3: குற்றியலுகரம்
A4: ஆய்தக் குறுக்கம்
விடை: A2: அளபெடை
நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்:
A1: நேற்று இரவு
A2: நேற்றிரவு
A3: நேற்றுரவு
A4: நேற் இரவு
விடை: A2: நேற்றிரவு
இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும் சொல்:
A1: பெயர்ச்சொல்
A2: வினைச்சொல்
A3: இடைச்சொல்
A4: உரிச்சொல்
விடை: A4: உரிச்சொல்
முனைவர் ச.இரா. அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
A1: சிறந்த காவலர்
A2: சிறந்த ஓவியர்
A3: சிறந்த நூலகர்
A4: சிறந்த ஆசிரியர்
விடை: A3: சிறந்த நூலகர்
முற்றியலுகரச் சொல் எது?
A1: மாடு
A2: புகு
A3: பந்து
A4: எஃகு
விடை: A2: புகு
மு.மேத்தா சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்:
A1: கண்ணீர்ப் பூக்கள்
A2: சோழநிலா
A3: ஆகாயத்துக்கு அடுத்த வீடு
A4: மகுடநிலா
விடை: A3: ஆகாயத்துக்கு அடுத்த வீடு
'ஆமந்திரிகை' என்பது:
A1: பட்டத்து யானை
A2: இடக்கை வாத்தியம்
A3: எடையளவு
A4: மூங்கில்
விடை: A2: இடக்கை வாத்தியம்
"தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே" எனக் கூறியவர் :
A1: சுக்ரீவன்
A2: வீடணன்
A3: அனுமன்
A4: இராமன்
விடை: A4: இராமன்
வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ! என்பதில் இடம் பெற்றுள்ள உவமை :
A1: உரு உவமை
A2: பயன் உவமை
A3: மெய் உவமை
A4: வினை உவமை
விடை: A2: பயன் உவமை
"மரபு நிலை திரிபின் பிறிது பிறிதாகும்" எனக் கூறும் நூல் எது ?
A1: நன்னூல்
A2: தொல்காப்பியம்
A3: முத்துவீரியம்
A4: வீரசோழியம்
விடை: A2: தொல்காப்பியம்
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - இத்தொடரில் இடம் பெற்றுள்ள வழுவமைதி :
A1: திணை வழுவமைதி
A2: பால் வழுவமைதி
A3: இட வழுவமைதி
A4: கால வழுவமைதி
விடை: A4: கால வழுவமைதி
"ஜகன் மோகினி" என்ற இதழை நடத்தி வந்தவர் யார்?
A1: பாரதியார்
A2: வை. மு. கோதைநாயகி
A3: கண்ணதாசன்
A4: கி.ஜானகிராமன்
விடை: A2: வை. மு. கோதைநாயகி
திராவிட மொழிக் குடும்பம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
A1: 5
A2: 8
A3: 7
A4: 3
விடை: A4: 3
சரியான தொடரைக் கண்டறிக.
A1: அவன் இலை பறித்தான்
A2: அவனுக்கு பிடிக்கும் என்பது எப்படி தெரியும்
A3: தினமும் பாடத்தை படி
A4: எழுதும்படி சொன்னேன்
விடை: A4: எழுதும்படி சொன்னேன்
எத்திசையில் இருந்து வீசுகின்ற காற்றை கோடை என்பர்?
A1: குடக்கு
A2: குணக்கு
A3: வாடை
A4: தெற்கு
விடை: A1: குடக்கு
பதினான்கு நரம்புகளைக் கொண்டது:
A1: பேரியாழ்
A2: சகோட யாழ்
A3: மகர யாழ்
A4: செங்கோட்டி யாழ்
விடை: A2: சகோட யாழ்
பழங்கால எழுத்தாணி வகைகளுள் தவறானது:
A1: மடக்கெழுத்தாணி
A2: குண்டெழுத்தாணி
A3: வாரெழுத்தாணி
A4: சீரெழுத்தாணி
விடை: A4: சீரெழுத்தாணி
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" -இக்குறட்பாவில் பயின்று வரும் தொடையின் பெயர் என்ன?
A1: மோனை
A2: முரண்
A3: எதுகை
A4: இயைபு
விடை: A1: மோனை
சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தவர் யார்?
A1: அப்பர்
A2: சுந்தரர்
A3: சேக்கிழார்
A4: மாணிக்கவாசகர்
விடை: A3: சேக்கிழார்
"கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" -என்னும் பாடலடி பயின்று வரும் நூல் எது ?
A1: சிலப்பதிகாரம்
A2: தொல்காப்பியம்
A3: மணிமேகலை
A4: புறப்பொருள் வெண்பா மாலை
விடை: A1: சிலப்பதிகாரம்
ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்:
A1: பாரதியார்
A2: திரு.வி.க
A3: கவிமணி
A4: குலோத்துங்கன்
விடை: A4: குலோத்துங்கன்
"யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத ________" -இக்குறளில் ஈற்றுச்சீர்களை நிரப்புக :
A1: வாரு
A2: மனம்
A3: வாறு
A4: வாரா
விடை: A3: வாறு
திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக தொடங்கும் நூல் எது?
A1: நீலகேசி
A2: சிலப்பதிகாரம்
A3: தேவாரம்
A4: திருத்தொண்டர் புராணம்
விடை: A2: சிலப்பதிகாரம்
அறிவியல் மற்றும் கணிதம் (கேள்விகள் 121 - 150)
கேள்வி 121: அணுக்கரு உலைகளில் தணிப்பான்கள் என்பவை கீழ்கண்ட எந்த ஒரு செயல்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது?
A1: அதிகமான நியுட்ரான்களை உட்கவரும்
A2: நியுட்ரான்களின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது
A3: நியுட்ரான்களின் இயக்க ஆற்றலை குறைக்கிறது
A4: நியுட்ரான்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது சரியான விடை: A3: நியுட்ரான்களின் இயக்க ஆற்றலை குறைக்கிறது
கேள்வி 122: 1/2 kg நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1K உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு என்ன?
A1: 4200 J
A2: 1000 J
A3: 8400 J
A4: 2100 J சரியான விடை: A4: 2100 J
கேள்வி 123: மூன்று 3 ஓம் மின்தடைகள் முதலில் தொடரிணைப்பிலும் பின்னர் பக்க இணைப்பிலும் இணைக்கப்படுகின்றன. அவற்றின் தொகுபயன் தொடரிணைப்பு, பக்க இணைப்பு மின்தடைகளுக்கு இடையேயான விகிதம் (Rs:Rp):
A1: 3:1
A2: 6:1
A3: 9:1
A4: 1:9 சரியான விடை: A3: 9:1
கேள்வி 124: ஹைட்ரஜன் அணுவின் 5 வது சுற்றுபாதையின் ஆரம் 13.25 Å எனில் அச்சுற்றுபாதையில் உள்ள எலக்ட்ரானின் அலைநீளம்:
A1: 16.64 Å
A2: 166.4 Å
A3: 29.80 Å
A4: 298.5 Å சரியான விடை: A1: 16.64 Å
கேள்வி 125: விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டினை சரி செய்வது:
A1: குவி லென்ஸ்
A2: குழி லென்ஸ்
A3: இரு குவிய லென்ஸ்கள்
A4: குழி ஆடி சரியான விடை: A3: இரு குவிய லென்ஸ்கள்
கேள்வி 126: வெற்றிடத்தின் விடுதிறன் மதிப்பு:
A1: ε0 = 1 / (4π × 9 × 10^9 N m^2 C^-2)
A2: ε0 = 1 / (4π × 9 × 10^-9 N m^2 C^-2)
A3: ε0 = 1 / (4π × 9 × 10^9 N m^-2 C^2)
A4: ε0 = 1 / (4π × 9 × 10^-9 N m^-2 C^2) சரியான விடை: A3: ε0 = 1 / (4π × 9 × 10^9 N m^-2 C^2)
கேள்வி 127: பொருள் ஒன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறது. அப்பொருள் 4 வினாடியில் தரையை அடைந்தால் கட்டிடத்தின் உயரம் என்ன? (காற்றுத் தடையை புறக்கணிக்க) (g = 9.8 ms^-2)
A1: 77.3 m
A2: 78.4 m
A3: 80.5 m
A4: 79.2 m சரியான விடை: A2: 78.4 m
கேள்வி 128: NH4OH + HNO3 -> NH4NO3 + H2O மேற்கண்ட வினை எவ்வகை வினையை சார்ந்தது?
A1: வீழ்படிவாக்கல்
A2: எரிதல் வினை
A3: நடுநிலையாக்கல் வினை
A4: சிதைவு வினை சரியான விடை: A3: நடுநிலையாக்கல் வினை
கேள்வி 129: ஒரு தனிமம் 2, 6 என்ற எலக்ட்ரான் அமைப்பு கொண்ட வாயு ஆகும். அத்தனிமத்தின் குழு / குடும்பம்:
A1: உப்பீனிகள்
A2: மந்த வாயுக்கள்
A3: சால்கோஜன்
A4: நைட்ரஜன் சரியான விடை: A3: சால்கோஜன் (ஆக்ஸிஜன் குடும்பம்)
கேள்வி 130: கீழ்க்கண்ட எந்த காரணி சோடியம் அசிட்டேட்டை மீத்தேனாக மாற்றுகிறது?
A1: அடர் H2SO4
A2: KMnO4/OH-
A3: NaOH/CaO
A4: நீர்த்த H2SO4 சரியான விடை: A3: NaOH/CaO (சோடா சுண்ணாம்பு)
கேள்வி 131: கட்டிடம் கட்டுவதில் அதிகம் பயன்படும் உலோகமானது ஈரக் காற்றுடன் வினைபுரிந்து பழுப்பு நிற நீரேறிய ஆக்சைடைத் தருகிறது. அந்த ஆக்சைடின் வேதிப் பெயர்:
A1: பெரஸ் ஆக்சைடு
A2: பெரஸ் டை ஆக்சைடு
A3: பெர்ரிக் ஆக்சைடு
A4: பெர்ரிக் டை ஆக்சைடு சரியான விடை: A3: பெர்ரிக் ஆக்சைடு (துரு)
கேள்வி 132: போரான் தொகுதி தனிமங்களின் பொதுவான வாய்ப்பாடு:
A1: ns^2 np^0
A2: ns^2 np^1
A3: ns^2 np^2
A4: ns^2 np^3 சரியான விடை: A2: ns^2 np^1
கேள்வி 133: அமிலம் அல்லது காரம் சேர்ப்பதினால் ஏற்படும் pH மாற்றத்தை தடுக்க உதவும் கரைசல்:
A1: அமிலக் கரைசல்
A2: தாங்கல் கரைசல்
A3: கார கரைசல்
A4: உப்புக் கரைசல் சரியான விடை: A2: தாங்கல் கரைசல் (Buffer Solution)
கேள்வி 134: BCC அலகுக் கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை:
A1: 1
A2: 2
A3: 3
A4: 4 சரியான விடை: A2: 2
கேள்வி 135: சிட்ரைட் பின்வருவனவற்றுள் எத்தகைய தாது வகையை சார்ந்தது?
A1: சல்பைடு தாது
A2: ஹேலைடு தாது
A3: ஆக்சைடு தாது
A4: கார்பனேட் தாது சரியான விடை: A4: கார்பனேட் தாது (FeCO3)
கேள்வி 136: காற்றின் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறும் பண்பு காணப்படுவது:
A1: பாசிகள்
A2: பூஞ்சைகள்
A3: பிரையோ ஃபைட்டுகள்
A4: ஜிம்னோஸ்பெர்ம்கள் சரியான விடை: A4: ஜிம்னோஸ்பெர்ம்கள்
கேள்வி 137: நீர் வடிதல் எவ்வகை சிறப்பு செல்களால் நிகழ்ந்தேறுகிறது?
A1: இலைத்துளை
A2: ஹைடதோடுகள்
A3: ஹைலம்
A4: மைக்ரோபைல் சரியான விடை: A2: ஹைடதோடுகள்
கேள்வி 138: கருவுறுதலின் போது மகரந்தக்குழாய் இதன் வழியாக சூலினை சென்றடைகிறது:
A1: சூலடி
A2: சூலுறை
A3: சூல்துளை
A4: இரண்டாம் நிலை உட்கரு சரியான விடை: A3: சூல்துளை
கேள்வி 139: தவறான கூற்று / கூற்றுகளை கண்டறியவும்: (a) கிளைடோரியாவில் மகரந்தத்தாள்களின் மகரந்தகம்பிகள் இணைந்து மூன்று கற்றைகளாகக் காணப்படும். (b) மகரந்தத்தாள்களுடன் சூல்முடி இணைந்து உருவாவது கைனோஸ்டீஜியம் ஆகும். (c) மகரந்தத்தூள்கள் ஒன்றாக இணைந்து ஒரே தொகுப்பாக ஹைபிஸ்கஸில் காணப்படும். (d) அஸ்பராகஸில் மகரந்தத்தாள்கள் அல்லி இதழ்களுடன் ஒட்டிக் காணப்படும்.
A1: கூற்று (b), (c) மற்றும் (d)
A2: கூற்று (a), (c) மற்றும் (d)
A3: கூற்று (c) மட்டும்
A4: கூற்று (b) மட்டும் சரியான விடை: A2: கூற்று (a), (c) மற்றும் (d)
கேள்வி 140: ஒரு தாவர செல்லை ஹைபர்டானிக் கரைசலில் வைக்கும்போது நீர் எவ்வாறு கடத்தப்படுகிறது?
A1: செல்லிலிருந்து நீர் வெளியேறுகிறது
A2: வெளியே இருந்து செல்லுக்கு நீர் செல்கிறது
A3: செல்லின் வெளியே மற்றும் உள்ளே நீர் செல்கிறது
A4: நீர் மூலக்கூறுகள் நகர்வதில்லை சரியான விடை: A1: செல்லிலிருந்து நீர் வெளியேறுகிறது
கேள்வி 141: ஒரு இயல்பான செல்லை ஹைப்பர்டானிக் கரைசலில் வைக்கும்போது அச்செல்லில் நடைபெறும் விளைவு:
A1: பிளாஸ்மா சிதைவு
A2: பிளாஸ்மா சிதைவு மீட்சி
A3: உட்சவ்வூடு பரவல்
A4: சவ்வூடு பரவல் சரியான விடை: A1: பிளாஸ்மா சிதைவு (Plasmolysis)
கேள்வி 142: ஆந்த்ரோகுயினோன் இதில் காணப்படுகிறது:
A1: துளசி
A2: கற்றாழை
A3: நிலவேம்பு
A4: நன்னாரி சரியான விடை: A2: கற்றாழை
கேள்வி 143: சாதாரண சளிக்கு தடுப்பு மருந்து தயாரிப்பது கடினமானது ஏன்?
A1: இதன் RNA ஜீனோம் தொடர்ந்து திடீர் மாற்றமடைவதால்
A2: இதன் DNA ஜீனோம் தொடர்ந்து திடீர் மாற்றமடைவதால்
A3: உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் தொடர் காலநிலை மாற்றத்தால்
A4: இதற்கு ஜீனோம் இல்லாததால் சரியான விடை: A1: இதன் RNA ஜீனோம் தொடர்ந்து திடீர் மாற்றமடைவதால்
கேள்வி 144: உயிரைப் போக்கும் இரத்தசோகை இவ்வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது:
A1: B1
A2: B6
A3: B3
A4: B12 சரியான விடை: A4: B12
கேள்வி 145: மனிதனின் பல் அமைப்பில் வெட்டும் பற்கள், கோரைப்பற்கள், முன்கடவாய் பற்கள் மற்றும் பின் கடவாய்ப் பற்களின் வரிசை அமைப்பு மற்றும் எண்ணிக்கை:
A1: 1,2,3,2 / 1,2,3,2 = 16 × 2 = 32
A2: 2,2,1,3 / 2,2,1,3 = 16 × 2 = 32
A3: 2,1,3,2 / 2,1,3,2 = 16 × 2 = 32
A4: 2,1,2,3 / 2,1,2,3 = 16 × 2 = 32 சரியான விடை: A4: 2,1,2,3 / 2,1,2,3 = 16 × 2 = 32
கேள்வி 146: காபி கொட்டை மற்றும் டீ இலை பதப்படுத்தும் போது அதிகமான நறுமணத்தை அளிப்பது:
A1: சாக்ரோமைசஸ் செர்விசியே
A2: ஆஸ்பர்ஸில்லஸ் நைசர்
A3: ஃபேசில்லஸ் மெகாடீரியம்
A4: லாக்டோ ஃபேசில்லஸ் சரியான விடை: A3: ஃபேசில்லஸ் மெகாடீரியம்
கேள்வி 147: விழித்திரையின் தசை நார்கள் செயல்புரிய உதவுவது:
A1: தண்டுவட நரம்பு
A2: கபால நரம்பு
A3: பரிவு நரம்பு
A4: எதிர் பரிவு நரம்பு சரியான விடை: A4: எதிர் பரிவு நரம்பு (Parasympathetic Nerve)
கேள்வி 148: இது உள்நாட்டுத் தேனீ வகை அல்ல:
A1: ஏபிஸ் டார்சேட்டா
A2: ஏபிஸ் புளோரியா
A3: ஏபிஸ் இண்டிகா
A4: ஏபிஸ் மெல்லிஃபெரா சரியான விடை: A4: ஏபிஸ் மெல்லிஃபெரா
கேள்வி 149: மனிதனில் நிகழும் முக்கிய இனப்பெருக்க நிகழ்வுகளின் சரியான வரிசையை எழுதுக:
A1: இனச்செல் உருவாக்கம் -> பிளவுப்பெருகல் -> கருவுறுதல் -> உறுப்பாக்கம் -> மகப்பேறு
A2: இனச்செல் உருவாக்கம் -> கருவுறுதல் -> பிளவுப்பெருகல் -> உறுப்பாக்கம் -> மகப்பேறு
A3: கருவுறுதல் -> பிளவுப்பெருகல் -> இனச்செல் உருவாக்கம் -> உறுப்பாக்கம் -> மகப்பேறு
A4: கருவுறுதல் -> பிளவுப்பெருகல் -> உறுப்பாக்கம் -> இனச்செல் உருவாக்கம் -> மகப்பேறு சரியான விடை: A2: இனச்செல் உருவாக்கம் -> கருவுறுதல் -> பிளவுப்பெருகல் -> உறுப்பாக்கம் -> மகப்பேறு
கேள்வி 150: வெளிச்சமில்லாத இரவு நேரங்களில் பினியல் சுரப்பி சுரக்கும் ஹார்மோன்:
A1: ஆக்ஸிடோசின்
A2: மெலட்டோனின்
A3: மெலனின்
A4: வாசோபிரஸ்ஸின் சரியான விடை: A2: மெலட்டோனின்