test

8-ஆம் வகுப்பு அறிவியல்: அலகு 1 - அளவீட்டியல் (Measurement)

8-ஆம் வகுப்பு அறிவியல் பாடம் 1: அளவீட்டியல் பாடத்திற்கான முழுமையான குறிப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வு (Quiz) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Measurement (அளவீட்டியல்) - Online Test

DOOZY STUDY
Science - Measurement Quiz

Science Quiz
Review
Re-Test
Go to Another Test
Submit
Next
Next

8-ஆம் வகுப்பு அறிவியல் - பாடக்குறிப்புகள்

அலகு 1 - அளவீட்டியல் (Measurement)

1. அறிமுகம் (Introduction)

  • இயற்பியல் (Physics): இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் குறித்த பாடப்பிரிவு. அறிவியல் பாடங்கள் அனைத்திற்கும் இதுவே அடித்தளம்.
  • கோட்பாடுகள்: அறிவியல் கோட்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, உறுதிசெய்யப்பட்டால் (confirmed by experiments) மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

2. அளவீடு (Measurement)

  • வரையறை: மதிப்புத் தெரிந்த ஒரு திட்ட அளவினைக் கொண்டு, தெரியாத அளவின் மதிப்பைக் கணக்கிடும் செயல்பாடே அளவீடு ஆகும்.
  • அனைத்து அறிவியல் ஆய்வுகளுக்கும் அளவீடே அடிப்படையானது.
  • முக்கியக் காரணிகள் (3):
    • கருவி (Instrument)
    • திட்ட அளவு (Standard quantity)
    • அலகு (Unit)
  • எடுத்துக்காட்டு: 30 செ.மீ என்பதில் '30' என்பது எண்மதிப்பு, 'செ.மீ' என்பது அலகு.

3. அலகு முறைகள் (Unit Systems)

  • 1. FPS முறை (ஆங்கில முறை):
    • இது மெட்ரிக் முறை அல்ல.
    • நீளம்: அடி (Foot - F)
    • நிறை: பவுண்ட் (Pound - P)
    • காலம்: வினாடி (Second - S)
  • 2. CGS முறை (மெட்ரிக் முறை):
    • நீளம்: சென்டிமீட்டர் (Centimeter)
    • நிறை: கிராம் (Gram)
    • காலம்: வினாடி (Second)
  • 3. MKS முறை (மெட்ரிக் முறை):
    • நீளம்: மீட்டர் (Meter)
    • நிறை: கிலோகிராம் (Kilogram)
    • காலம்: வினாடி (Second)
  • குறிப்பு: மூன்று முறைகளிலும் காலத்தின் அலகு 'வினாடி' என்பதே பொதுவானது.

4. பன்னாட்டு அலகு முறை (SI Units)

  • தேவை: உலகம் முழுவதும் பொதுவான அளகு முறை தேவைப்பட்டதால் உருவாக்கப்பட்டது.
  • உருவாக்கம்: 1960 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற 11-வது பொது மாநாட்டில் SI அலகு முறை உருவாக்கப்பட்டது.
  • பெயர் காரணம்: Systeme International என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து SI பெறப்பட்டது.
  • இதில் 7 அடிப்படை அளவுகள் உள்ளன.

5. SI அடிப்படை அளவுகள் மற்றும் அலகுகள்

அடிப்படை அளவு அலகு (Unit) குறியீடு (Symbol)
நீளம்மீட்டர்m
நிறைகிலோகிராம்kg
காலம்வினாடிs
வெப்பநிலைகெல்வின்K
மின்னோட்டம்ஆம்பியர்A
பொருளின் அளவுமோல்mol
ஒளிச்செறிவுகேண்டிலாcd

  • முக்கிய குறிப்புகள்:
    • வெப்பநிலையின் SI அலகு கெல்வின் (செல்சியஸ் அல்ல).
    • மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.
    • ஒளிச்செறிவின் அலகு கேண்டிலா.

6. மார்ஸ் கிளைமேட் ஆர்பிட்டர் விபத்து

  • அமைப்பு: NASA (அமெரிக்கா).
  • நோக்கம்: செவ்வாய் கோளின் காலநிலையை ஆராய்தல்.
  • விபத்து நாள்: 1999 செப்டம்பர் 23.
  • காரணம்: கணக்கீட்டுப் பிழை (அலகு முறை குழப்பம்).
    • ஒரு குழு FPS (ஆங்கில) முறையையும், மற்றொரு குழு MKS (மெட்ரிக்) முறையையும் பயன்படுத்தியதால் குழப்பம் ஏற்பட்டது.
  • இழப்பு: சுமார் 125 மில்லியன் டாலர்கள்.

© Doozy Study - Science Notes

Popular posts from this blog

TNTET/TNPSC/NMMS Social Science Online Test - Part-51- 2024

TNTET/TNPSC/NMMS Social Science Online Test - Part-48- 2024

TNTET/TNPSC/NMMS Science Online Test - Part-1- 2024